ஒரு கோடித் தேன்பூக்கள் ஒன்றாக மணம் வீசும் என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு கோடித் தேன்பூக்கள் ஒன்றாக மணம் வீசும்

என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்

மனமென்னும் பொன் வண்டு உன்னன்பில் கட்டுண்டு

தமிழாலே கவிபாடும் பேரானந்தம்

சிறகுகளாய் என் மனம் என் மனம்

விரிகிறதே பறந்திட பறந்திட

இறை உறவில் இணைந்திட இணைந்திட

மகிழ்கிறதே நம்தன நம்தன

வாராயோ பேரன்பே என் இயேசுவே

தாராயோ பேரின்பம் என் வாழ்விலே


1. உன்னன்பில் என் கண்கள் கடலானதே

என் வானில் விண்மீன்கள் ஒளிவெள்ளமே

உன்னோடு ஒன்றாகும் பொன்னாளிதே

என் வாழ்வில் ஈடேதும் இதற்கில்லையே

நீ வேண்டுமே நிதம் வேண்டுமே

நிலையான உன் அன்புத்துணை வேண்டுமே

மாமன்னனே என் வேந்தனே

நிறைவாழ்வு தருகின்ற இறைமைந்தனே


2. என் கால்கள் இறைவார்த்தை வழிசெல்லவே

என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே

உயிர்மூச்சே நீதானே என் தேவனே

உனையன்றி எனக்கிங்கு வாழ்வில்லையே