சுவாமீ இவர்மேல் கிருபையாயிரும்
கிறீஸ்துவே இவர்மேல் கிருபையாயிரும்
சுவாமீ இவர்மேல் கிருபையாயிரும்
பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, இவருக்குத் தயை செய்தருளும் சுவாமீ.
உலகத்தை மீட்டிரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, இவருக்குத் தயை செய்தருளும் சுவாமீ.
இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, இவருக்குத் தயை செய்தருளும் சுவாமீ.
அர்ச். தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, இவருக்குத் தயை செய்தருளும் சுவாமீ.
அர்ச். மரியாயே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
தூதரும் அதிதூதருமாகிய சகல அர்ச். சம்மனசுகளே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். ஆபேலே இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
புண்ணிய ஆத்துமாக்களான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அபிரகாமே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். ஸ்நாபக அருளப்பரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச் சூசையப்பரே இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
பிதாப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். இராயப்பரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சின்னப்பரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பெலவேந்திரரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அருளப்பரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆண்டவருடைய சகல பரிசுத்த சீஷர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
மாசில்லாத சகல அர்ச். குழந்தைகளே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். முடியப்பரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சில்வேஸ்திரயுவே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். கிரகோரியுவே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அகுஸ்தீனாரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
மேற்றிராணியாரும் ஸ்துதியருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். ஆசிர்வாதப்பரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பிராஞ்சீஸ்குவே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். கமீலியாரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். தேவ அருளப்பரே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
குருக்களும் தபோதனருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். மரியமதலேனம்மாளே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பிரகாசியம்மாளே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியாஸ்திரிகளும் விதவை ஸ்தீரிகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ, பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்காக வேண்டிக்கொள்ளும்.
தயாபரராயிருந்து இவருடைய பாவங்களைப் போக்கியருளும் சுவாமீ.
தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமீ.
சகல பொல்லாப்புகளிலிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
சகல பாவங்களிலிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய கோபத்திலும், தண்டனையிலிருந்தும் இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய தயவின் மேல் அவநம்பிக்கையிலும் மரண அவஸ்தையிலுமிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
சாவின் பயங்கரத்திலும், சீவன்மேலுள்ள மிகுந்த ஆசையிலுமிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
துர்மரணத்திலிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
நரக வாதனையிலும், சகல பொல்லாப்பிலுமிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
பசாசின் சோதனையிலும், தந்திரத்திலுமிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
உலக காரியத்தில் ஊன்றி நித்தியத்திற்கு ஆயத்தப்படாத அசட்டையிலுமிருந்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய திரு அவதாரத்தைப் பார்த்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய சிலுவையையும், பாடுகளையும் பார்த்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய திரு மரணத்தையும், அடக்கத்தையும் பார்த்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேவரீருடய மகிமையான உத்தானத்தைப் பார்த்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய அதிசயமான ஆரோகணத்தைப் பார்த்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
தேற்றரவு செய்கிறவரான இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதத்தைப் பார்த்து இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
மரணவேளையிலும் நடுத்தீர்வை நாளிலேயும் இவரை இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ.
பாவிகளாகிய நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமீ.
இவருடைய பாவங்களைப் பொருத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமீ.
உலகத்தின் பாவங்களைப் - மற்றதும்.
முதல் - சுவாமீ எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
துணை - எங்கள் அபயச்சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது. ஒரு பர.