♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இளங்கதிர் வீசியே வரும் இளங்காலையில்
இறைவனை தொழுதிட வா - தினமே
அருள்நிறை தேவனின் ஆலய மணியாய்
அவர் புகழ் ஒலித்திடவா புவியில்
1. பரிசுத்த பரமனின் சந்நிதி வருமுன்
பரிசுத்தமாக உன் மனதினைக் கழுவு
பரிவுடன் அருளும் பரமனின் அன்பில்
பணிவுடன் திளைத்திட வா - தினமே
2. மன இருள் களைந்திடு மாசினை அகற்றிடு
இனத்தவர் யாவரும் சமம் எனக் கருது
அகம் புறம் அனைத்திலும் அன்பினைக் காட்டு
அருளினை அடைந்திடுவாய் - இறைவன்