அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே

அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே

அருள்பார்வை ஒன்றே போதுமே

எந்தன் வாழ்வு வளம் பெறுமே


1. மண் மீது பகை வளர்க்க வேர்கள் தான் விரும்புமோ

மனிதரை வெறுத்துவிட்டு உன் வழி நடப்பதோ

உன்னிலே நானும் வாழ்ந்திட வேண்டும்

உறவின் இராகங்கள் இசைத்திட வேண்டும்

என்றும் மண்ணில் உந்தன் அன்பில் நிலைத்திட வேண்டும்

எந்தன் உள்ளம் நீயே வந்து உறைந்திட வேண்டும்


2. வாதங்கள் பேதங்களால் வளர்ந்திடும் சுயநலம்

வன்முறை பேரிடரால் வாடிடும் மானிடம்

அனைத்துயர் காக்கும் அருள்மழையே வா

அகத்தினில் அமைதியும் ஆற்றலும் நீ தா

இருளினைப் போக்கும் ஒளியென வாழ்வேன்

இறைவனின் திருவுளம் நடந்திட உழைப்பேன்