♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம்
தேவதையாகும் ஆ
வெண்ணிலவோ வேதன் அமரும்
வாகனமாகும் ஆ
ஞான ஜோதியே உயர்வான ஜோதியே ஆ
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் - நல்ல
மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு
புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்
1. மழலை மொழிகள் கேட்கக் கேட்க மனது துள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் தொட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்
2. அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை போகும் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்