பாசத்தோடு தேடி வந்த இயேசுவே - எந்தன் பாவங்களைப் பொறுத்தருள்வாய் இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பாசத்தோடு தேடி வந்த இயேசுவே - எந்தன்

பாவங்களைப் பொறுத்தருள்வாய் இயேசுவே (2)


1. கடமைதனை மறந்துவிட்டேன் இயேசுவே

காலத்தை வீணடித்தேன் இயேசுவே (2)


2. பெற்றோரை மதிக்கவில்லை இயேசுவே

பெரியோர் சொல் கேட்கவில்லை இயேசுவே (2)


3. சுயநலத்தில் வாழ்ந்து வந்தேன் இயேசுவே

என் சுகத்தை மட்டும் பார்த்துக் கொண்டேன் இயேசுவே (2)


4. செபம் செய்ய மறந்துவிட்டேன் இயேசுவே

உமக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன் இயேசுவே (2)