♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென
இறைவா ஏற்றிடுவீர் சுகராகம் மீட்டிடுவீர்
1. தூசு படிந்த நரம்பு என்று
என்னை வெறுத்து விடாதீர்
மாசு நிறைந்த மனிதன் என்று உம்
உறவை நிறுத்தி விடாதீர்
என் இயேசுவே என் தெய்வமே
என்னோடு நீர் பேச வேண்டும்
உம் வார்த்தையில் தினம் நானும்
உயிர் வாழ வேண்டும்
இறைவா இறைவா இறைவா இறைவா
2. தீராத சோகத்தில் நான் மூழ்கும்போது
சுமைதாங்கி நீர்தானய்யா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது
இடிதாங்கி நீர்தானய்யா
என் தலைவா என் துணை வா
என் தனிமை நீர் நீக்க வேண்டும்
உம் பார்வையால் என் விழி
ஒளி பெற வேண்டும்