உலகாளும் தலைவன் உயிருள்ள இறைவன் உதிக்கின்ற நேரமிது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உலகாளும் தலைவன் உயிருள்ள இறைவன்

உதிக்கின்ற நேரமிது

உள்ளங்கள் எல்லாம் உண்மையில் வாழ

உணவாகும் தருணமிது

கரம் கூப்பி சிரம் தாழ்த்திப் பணிவோம் - அவர்

பணி செய்யும் சீடராய் உயர்வோம்


1. செல்கின்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தவர்

நமையெல்லாம் அழைக்கும் நேரமிது

தேவையில் இருப்பவர் அனைவரைத் தேடி

பணி செய்ய அழைக்கும் நேரமிது

ஆனந்த நேரமிது அருள்மழை பொழிகிறது


2. அயலாரைத் தேடி நேசித்த இறைவன்

பாதையில் சென்றிடும் நேரமிது

நண்பருக்காக உயிர்தர அழைத்தவர்

தியாகத்தை உணரும் நேரமிது