நாங்கள் சந்தோஷத்தினால் அகமகிழ்ந்து பிரமித்து "பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" தளத்திற்குக் கர்த்தராகிய தேவனென்றும், அவருடைய மகிமைப்பிரதாபம் உலகங்கள் எங்கும் நிறைந்திருக்கிற தென்றும், முத்திப்பேறு பெற்றவர்கள் அவரைப் பரலோகத்தில் ஸ்துதிக்கக்கடவார்கள் என்றும், பிதா பிதாவினால் அனுப்பப்பட்டுப் பிதாவுக்குச் சரிசமான தேவனாயிருந்து பூலோகத்தில் எழுந்தருளி வருகிறவருக்கு மாறாத தோத்திரம் உண்டாகக்கடவதென்றும் சம்மனசுகளுடனே நாங்களும் உம்மைப் புகழ்கிறோம்.