ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசுநாதா உம்மை நான் அறிந்து உறவாட

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசுநாதா

உம்மை நான் அறிந்து உறவாட

உள்ளதெல்லாம் இழந்தேன் நான்


1. உம்மை நான் ஆதாயமாக்கவும் உம்மோடு ஒன்றாகவும்

எல்லாமே குப்பை என எந்நாளும் கருதுவேன்


2. என் விருப்பம் எல்லாமே இயேசுவே நீர் தானன்றோ

உம் திரு ஆவி பெற உம் பாடுகள் ஏற்பேன்


3. கடந்ததை மறந்தேன் கண் முன்னால் என் இயேசுதான்

தொடர்ந்து ஓடுவேன் தொல்லைகள் என்ன செய்யும்