♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பொழுது புலரும் நேரமிது
தந்தானே தந்தானே தந்தானே னா
தென்றல் தாலாட்டும் பாடுது
தந்தானே தந்தானே தந்தானே னா
பூத்தூவி வானவர் உன்னை வாழ்த்திப் பாடிட
புன்சிரிப்போடு துயிலும் பாலன் இயேசுவே ஆராரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
1. துன்பத்திலே துவண்டு வாடும் ஏழை உள்ளங்களே
பாவத்திலே பரிதவிக்கும் இறைவன் சாயல்களே
கண் கலங்கிட வேண்டாம் உள்ளம் வருந்திட வேண்டாம்
நல் வரம் கொடுத்து வாழ வைக்க இயேசு பிறந்துள்ளார்
2. உள்ளத்திலே இறைவன் அரசு உதயமாகட்டும் - நம்
இல்லத்திலே இறைவன் அருள் வந்து தங்கட்டும் - நம்
உலகெத் திசையிலும் இறைமாட்சி ஓங்கட்டும்
உலக மாந்தர் அனைவரும் இறை அன்பில் வாழட்டும்