♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசு இராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே
என் நேசர் நீதானய்யா
என்னை தேற்றிடும் எனதேசய்யா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமய்யா
1. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தார்
அலைபோல துன்பம் எனைச் சூழ்நத போதும்
அன்பாலே அணைத்துக் கொண்டார்
2. ஆபத்துக் காலத்திலே இயேசு
அனுக்கிரகம் துணை நான் என்றார்
அன்பே என்றார் என் பிரியமே என்றார்
மணவாட்டி நீயே என்றார்
3. பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்