♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமாய்
அன்போடு எனைக் காத்து
என்னோடு இருந்து என்னை வழிநடத்தும்
இறைவா உமக்கு நன்றி
1. ஒரு புன்னகை புரியும் குழந்தையை நினைத்தால்
கவலைகள் மறக்குதய்யா
பல கவிதைகள் பிறக்குதய்யா - எந்த
சின்ன செயலிலும் ஈடுபட்டுழைத்தால்
மனதிற்கு மகிழ்ச்சியய்யா
இறையரசங்கே மலருதய்யா
வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவினிலும்
வழிநடத்த வேண்டும் இயேசய்யா
2. உந்தன் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தைகள்
நெஞ்சத்தில் நிறைந்ததய்யா
என்னில் நிம்மதி பிறக்குதய்யா - உந்தன்
திருமுக ஒளியில் என் மனக் காயங்கள்
யாவும் மறைந்ததய்யா
என்னால் மன்னிக்க முடியுதய்யா
உனதெழில் சாயலை மனிதர்களில்
தினம் நான் பார்ப்பேன் இயேசய்யா