மகனே உன் கால் இடற விடமாட்டார் உன்னைக் காப்பவர் உறங்க மாட்டார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மகனே உன் கால் இடற விடமாட்டார்

உன்னைக் காப்பவர் உறங்க மாட்டார்


1. உன்னைக் காப்பவர் அயர்வதில்லை

உறங்குவதும் இல்லை

ஆண்டவர் என்றென்றும் உன்னைக் காக்கின்றார்

உனக்கு பாதுகாப்பாய் இருக்கின்றார்


2. பகலின் வெயிலோ உன்னைச் சுடாது

நிலவோ தீமை செய்யாது

ஆண்டவர் எல்லாவித தீமை அகற்றி

உந்தன் ஆன்மாவைக் காக்கின்றார்


3. ஆண்டவர் நீ போகும் வழியைக் காக்கின்றார்

வரும் போதும் காக்கின்றார்

இப்போதும் எப்போதும் உன்னைக் காக்கின்றார்

உன்னோடு என்றென்றும் வாழ்கின்றார்