பொன்னோடை கீழ்வானில் பாய்கின்றது
பூபாளம் என் பாட்டில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர்நின்றது
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளிதர நீ வா
திருச்சபை முழுதும் அருள்மழை பொழியும்
குழந்தை இயேசுவே சரணம் சரணம் திருவடி சரணம்
காற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன்
செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன்
1. நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒரு போதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே
மன ஆலயம் உனதல்லவோ குழந்தை இயேசுவே
சரணம் சரணம் திருவடி சரணம்
ஆகாய ராஜாங்கம் ஆள்கின்றவன்
அன்பென்னும் அன்னத்தில் வாழ்கின்றவன்
மேய்ப்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாமவன்
2. ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ
அருள் அன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை இயேசுவே சரணம் சரணம் திருவடி சரணம்