இரக்கமுள்ள சர்வேசுரா! உம்முடைய திருக்குமாரனின் விலைமதியாத திரு இரத்தப் பலனால் பொதுவாயிருக்கிற திருச்சபையை ஆண்டு நடத்துகிறீரே, எங்கள் பரம பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள சர்வேசுரா, அந்தச் சபையை அருட் கண்ணால் பார்த்து உமது மந்தையின் மேய்ப்பர்களாயிருக்கிற மேற்றிராணிமார்கள் உம்முடைய சபைக்குரிய திருப் பணி விடையைச் செய்ய உண்மையோடும் நிதானத்தோடும் தகுதியானவர்களைத் தெரிந்துகொள்ளும்படி இக்காலத்திலே அவர்கள் மனதை நடத்தி ஆண்டருளும். அன்றியும், எவ்வகை யான திருப் பணிவிடையிலும் சேரக் குருட்டாட்டம் அடைகிற வர்கள், தங்கள் நடத்தையினாலும், உபதேசத்தினாலும் உமது மகிமையைப் பிரசித்தம் செய்து, சகல மனிதருக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு ஏதுவாயிருக்கும்படி உம்முடைய திருக்குமார னாகிய சேசுகிறீஸ்துவின் மூலமாய் உம்முடைய கிருபையையும், ஆசீர்வாதத்தையும் அவர்களுக்குக் கொடுத்தருளும், ஆமென்.