புனிதராம் தோமையைப் போற்றிடுவோம் புகழ்ந்து பாடி மகிழ்ந்திடுவோம்


புனிதராம் தோமையைப் போற்றிடுவோம்

புகழ்ந்து பாடி மகிழ்ந்திடுவோம்


1. தேவனாம் இயேசுவின் சீடராய் வந்தார்

இயேசுவின் திருமறை போதனை தந்தார்

இறைவனின் அன்பினை இனிதாய் வளர்த்தார்

என்றும் மேன்மை விளங்கிடச் செய்தார்


2. அய்யனின் ஐந்திரு காயங்கள் கண்டார்

அன்பும் ஆர்வமும் பெருகியும் நின்றார்

வான்புகழ் கிடைத்த பாக்கியம் தன்னை

பாரத பூமியில் தந்தெம்மை கொணர்ந்தார்