♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா
உனை நம்புகிறேன்
உன்னோடு நான் கொண்ட உறவினிலே வாழ
உனைத் தேடுகிறேன்
இறைவா வருவாய் இதயம் தருவாய்
1. உள்ளத்தின் இறைவா உமதருள் வார்த்தை
உருக்கிடுமே பாவக்கறை தனையே
உதிர்த்திடுமே உள்ளக் கவலைகளை
அன்பால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை
2. பார் போற்றும் பண்பாம் உன் எளிய வாழ்வு
படைத்திடுமே பாச உலகந்தனை
பகிர்ந்திடுமே அன்பு வாழ்வுதனை
பாசத்தால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை