இறையவனே உன்னை நான் காண வந்தேனே என்னவனே என்னை நான் உன்னிடம் தந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறையவனே உன்னை நான் காண வந்தேனே

என்னவனே என்னை நான் உன்னிடம் தந்தேன்

நீயே எனக்கு எல்லாம் நீயே எனக்கு எல்லாம்


1. தனிமைக் குளிரும் நிலவாகும் நீ என்னோடு இருப்பதால்

தடுக்கும் கல்லும் தடமாகும் நீ எனக்காய் நடப்பதால்

காரிருள் ஒளிரும் சுடராகும் நீ என் முகம் பார்ப்பதால்

கசக்கும் உறவும் கரும்பாகும் நீ என் கரம் பிடிப்பதால்


2. வீசும் புயலும் பூவாகும் நீ என் மனம் நிறைவதால்

சுமையும் இனிய சுகமாகும் நீ எனக்காய் சுமப்பதால்

பாவ வாழ்வும் பனியாகும் நீ என் கறை துடைப்பதால்

எல்லாம் இன்றே இனிதாகும் நீயும் நானும் இணைவதால்