எந்தன் இயேசுவே என் இதய தெய்வமே எந்நாளும் உன் பாதம் தரிசனம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் இயேசுவே என் இதய தெய்வமே

எந்நாளும் உன் பாதம் தரிசனம் (2)


1. உன்னிதயம் போல் எனக்கும் ஓர் இதயம் வேண்டும்

உன்னுணர்வு போல் எனக்கும் உள்ளுணர்வு வேண்டும்


2. உன் விழியின் பார்வையினை என் விழியில் தாரும்

உன் மொழியின் ஆற்றலினை என் மொழியில் சேரும்


3. அன்பர் பணி செய்வதற்கு அழைத்திட வேண்டும்

உன் வழியில் செல்வதற்கு உன்னருளே போதும்


4. ஏழையரின் தெருக்களிலே இறங்கிட வேண்டும்

என்னுயிர் உடமையெல்லாம் பகிர்ந்திட வேண்டும்