அருள்பொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே

1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருள்பொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா

என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே


1. தென்றல் இன்பம் திளைத்திடும் விண்ணிலவின் தண்ணொளி போல்

இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தில் இறங்கி வா

இன்பம் தரும் இயேசு நாதா


2. இன்றலர்ந்த மல்லிகை போல் நறுமணம் வீசிடவே

அள்ளி எனை அணைத்திட வந்திடுவாய் விண்ணமுதே


3. துன்பம் பல சூழ்ந்திடவே உன்னையே நான் நாடி நிற்க

தட்டி எனைத் தேற்ற வாராய் விண்ணவரின் போஜனமே