எம் இயேசுவே எம் நல் இயேசுவே உமது நேசம் தந்தருளும் இரக்கமான இரட்சகரே எமது பாவங்களைப் பொறும்


எம் இயேசுவே எம் நல் இயேசுவே உமது நேசம் தந்தருளும்

இரக்கமான இரட்சகரே எமது பாவங்களைப் பொறும்


1. விலையில்லாஇ ருதயமே மேலுலகோர்அ திசயமே

உலகத்தின்தி ரவியமே சகலர்க்கும் இரட் சணியமே


2. வானுலகில் வீற்றிருந்த நீர் ஈனப் பாவிகட் கிரங்கினீர்

மானிட வேஷம் நீரெடுத்தீர் மண்ணுயிரைமீட் டுஇரட்சித்தீர்


3. வரப்பிரசாத ஊறணியே பரமலோகத் தின்மகிழ்வே

நிரப்புவீர்நெஞ் சங்களையே நேசத்தின் நல்லி ருப்பிடமே


4. சருவ நன்மை யும்தரவே தயவாய் எம்மை அழைக்கிறீர்

சட்டை பண்ணாமல் நாமிருக்க சாந்தமுடன்காத் திருக்கிறீர்


5. புத்தியுடன் சுத் தமனசும் பக்தியும் என்றும் தந்தருளும்

சுத்த சிநேகத் தின்சுடரும் சுவாலிக்கப் பண் ணியருளும்