அன்பின் வடிவான அன்னை நெஞ்சில் எனைத் தாங்கும் அன்னை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பின் வடிவான அன்னை

நெஞ்சில் எனைத் தாங்கும் அன்னை

வஞ்சம் பகை சூழ்ந்து தடுமாறும் போதும்

தஞ்சம் என்றான அன்னை


1. பூமி எங்கெனும் ஜீவஓசையின்

ஆதிதாளமும் அன்னை என்பதே

தேவகாவியம் பூமி வந்ததும்

அன்னை அன்பிலே அன்னை அன்பிலே

பாசம் பல கோடி என் ஆசை நீதானம்மா

நெஞ்சில் எனைத் தாங்கி நான் கண்ட செல்வம் நீயே

நேசம் தந்தாயம்மா ஸா ஸா பா பநி ஸக ரீ

எந்நாளும் நீதானம்மா

பாசம் பல கோடி நெஞ்சில் எனைத் தாங்கி

நேசம் தந்தாயம்மா எந்நாளும் நீதானம்மா

ஆசை வானங்கள் தேடும் பேதை நானாகினேன்

காசு போல வந்து போகும் வாழ்வில் என்றும்


2. ஆயிரம் குறை ஆன போதிலும்

அன்னை அன்புதான் அளவில் மாறுமோ

இன்று போலவே எந்த நாளுமே

உந்தன் அன்பிலே உந்தன் அன்பிலே

பாதை பலவாகும் நான் எங்கு செல்வேனம்மா

கால்கள் திசைமாறும் உன் பாதை நான் வேண்டினேன்

உன்னை மறவேனம்மா ஸா ஸா பா பநி ஸக ரீ எந்நாளும் நீதானம்மா

பாதை பலவாகும் கால்கள் திசைமாறும்

உன்னை மறவேனம்மா எந்நாளும் நீதானம்மா

எண்ணம் பலவான போதும் உன்னை மறவேனம்மா

காசு போல வந்து போகும் வாழ்வில் என்றும்