இமைப்பொழுதேனும் எனைப் பிரியாமல் காக்கும் நல் தேவனாக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இமைப்பொழுதேனும் எனைப் பிரியாமல்

காக்கும் நல் தேவனாக

எல்லாமும் தந்து என்னோடு இருக்கும்

இயேசுவே வாழ்க வாழ்க


1. இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே

இதயத்தின் கவலைகள் மறையுதய்யா

நெஞ்சினில் உமையே நினைக்கின்ற போது

உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது

நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமய்யா

குறைவில்லா புதுவாழ்வு தருபவர் நீரல்லவா

ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி

ஆண்டவா உன்னைத் துதிக்க வந்தேன்


2. தாளத்தை இழந்த பாடலைப் போல

உனை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே

உன் திரு வார்த்தையைத் தியானிக்கும் போது

பலன்தரும் நல்ல நிலமானேன்

ஆகாய கங்கையைப் போல் அருள்மழை பொழிபவரே

பூமழை தூவி உந்தன் பொற்பாதம் பணிகின்றேன்

கண்மணி போல் எனைக் காக்கும் ராஜா

கானங்கள் இசைத்து துதிக்க வந்தேன்