முதிர் முத்தொளிவோ முகம் குளிர்நிலவோ இவள் இத்தரை தாரகையோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


முதிர் முத்தொளிவோ முகம் குளிர்நிலவோ

இவள் இத்தரை தாரகையோ

விண்ணில் பொற்சரமோ வியர் புதுமலரோ

நம் விமலனின் தாயல்லவோ

ஓயாது பாடிடுவோமே புகழ் உன்னத அன்னையற்கே

ஓ தேவதாய் இவளே இவளே

நம் ஏக அடைக்கலமே நிதமும்

ஓ தேவதாய் இவளே இவளே

துதி பாடியே தோத்தரிப்போம்


1. புதுமணம் கமழும் நிதம் அகம் மலரும்

திருப்பதமது நிதம் திகழும்

திருமந்திர மாநகர் ஆலயத்தில்

வளம் தந்தருள் மாமரியே