எனக்காகப் பலியான சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையே என் மேல் இரக்கமாயிரும். என் இரட்சணியத்திற்காக ஒப்புக் கொடுக்கப்பட்ட அர்ச்சிக்கப்பட்ட பலியே! என்னை இரட்சித்துக் கொள்ளும். பிதாவினிடத்தில் எனக்காக மனுப்பேசும் பரம கர்த்தரே! உமது பிதாவினிடத்தில் எனக்கு வேண்டிய இஷ்டப் பிரசாதத்தை நான் அடையச் செய்து உமது சமாதானத்தை எனக்குத் தந்தருளும்.