இறைவா உன் முகம் காண்பதற்கு இந்த ஏழையின் உள்ளம் தவிக்கின்றது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா உன் முகம் காண்பதற்கு

இந்த ஏழையின் உள்ளம் தவிக்கின்றது (2)

நீரே என் அபயம் நீரே என் சரணம் - 2

நீரே என் முதலும் நீரே என் முடிவும் - 2


1. கண்களின் முன்னே வரவேண்டும்

உன் பார்வையில் நானே விழவேண்டும் (2)

அழகிய உன் பதம் தொடவேண்டும்

நான் ஆயிரம் வரங்கள் பெறவேண்டும் (2)


2. மனதினில் விளையும் பயமெல்லாம்

ஒரு வார்த்தையில் போக்கிடும் தெய்வமே (2)

தொல்லைகள் என்னைத் தொடும் வேளை

என் தோழனாய் இருப்பாய் தெய்வமே (2)


3. இறைவா உன் முகம் காண்பதற்கு

இந்த ஏழையின் உள்ளம் தவிக்கின்றது (2)

நீரே என் வளமும் நீரே என் வாழ்வும் - 2

நீரே என் துணையும் நீரே என் மீட்பும் - 2