♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தேவன் வந்த அந்நாளிலே
வானும் மண்ணும் ஒன்றானது
காலகாலமாக இங்கே
மனுக்குலம் மகிழ்ந்திடும் நாளானது
நெஞ்சம் நிறைந்த புதுமையில் - இன்று
பொங்கும் இசைமழை வெள்ளம்
இறைவனின் பிள்ளைகள் நாங்கள் - காணும்
இலட்சிய விடுதலைக் கனவுகள்
கனவுகள் யாவும் நனவுகள் ஆகும்
இனி இந்த பூமி புதுமுகம் காணும்
வா வா நண்பா நீயும் நானும்
சேர்ந்து வந்தாலே வாழ்வு நன்றாகும்
1. லாலாலாலாலா லாலாலாலாலா
வானமுத மழையில் இதயம்
நனைகையில் புதிய உணர்வுகள்
எனது மனதினில் இனிய நினைவுகள்
கனிவும் கருணையும் கனியும் இதயமும்
நாளும் வாழ்வை அழுத்தும் சுமைகள்
நீங்கும் வழிகள் தெரியும் தெரியும்
பூவும் புயலை எதிர்த்தே ஜெயித்திடும்
புதுமை நமக்குப் புரியும் புரியும்
வான்படைகளென நாம் நடந்து வர
நான் எனக்கு எனும் சுயநலம்
மறைந்திடும் புதுயுகம் என்றாக
2. என் உலகம் முழுதும் நெடிய
இரவுகள் விடியும் அழகினில்
கொடுமை விழியிலும் இனிய கனவுகள்
கோலம் எழுதிடும் புதிய உறுதிகள்
போதும் உலகை மாய்த்திடும் போர்களும்
பேதம் வளர்க்கும் மதங்களும் சாதியும்
யாரும் நமது ஊரெனும் உலகெனும்
வேதம் இங்கு வென்றிட வேண்டும்