♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ இயேசுவின்
1. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு - 2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு இயேசுவின்
2. அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமர் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலை போல் எழுந்தென்னை வழைத்திடும் அன்பு - 2
சிலை என பிரமையில் நிருத்திடும் அன்பு இயேசுவின்
3. எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு இயேசுவின்