ஆண்டவரே, இந்தப் பூசை காண்கிற பாக்கியம் அநேகம் பேர்களுக்குக்கிடைக்காமலிருக்க அடியேனுக்குக் கிடைக்கத் தயை புரிந்ததினால் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். உம்முடைய திருச் சமுகத்தில் என்னுடைய அசட்டையினாலேயும், பராக்கினாலேயும் செய்த தப்பிதங்களையும் அனாச்சாரங்களையும் பொறுத்தருளவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறேன். சர்வேசுரா சுவாமீ, இந்தத் திவ்விய பலியினால் நான் செய்த பாவங்களுக்குப் பொறுத்தலும், இனி அதுகளில் விழாதபடிக்கு இஷ்டப்பிரசாதமும் பலமும் தந்தருளும். இதோ தேவரீரை நம்பிக்கொண்டு என் அலுவல்களை உம்முடைய சித்தத்தின்படி நடத்தப் போகிறேன். நீர் எனக்கு இப்பொழுது செய்த உபகாரத்தை இந்த நாள் முழுதும் நினைத்துக் கொண்டு வருகிறதன்றியே, நான் இப்பொழுது அடைந்த பூசையின் பலனை இழந்துபோகச் செய்யக்கூடுமான அற்ப துராசைக்கும், நினைவுக்கும், வார்த்தைக்கும் நான் இடங்கொடாமலிருக்க உமது திவ்விய அநுக்கிரக உதவியால் தீர்மானித்தேன் சுவாமீ. ஆமென்.