பிதாச் சுதன் இஸ்பிரீத்துசாந்துவாகிய திரித்துவ ஏக சர்வேசுரா, தேவரீரை வணங்கித் துதிக்கிறேன். தேவரீருடைய திருவாக்கெல்லாம் முழுமனதோடே விசுவசித்து நம்பிச் சகலத் தையும் பார்க்க உம்மையே நேசிக்கிறேன். தேவரீர் அடியேனுக்குச் செய்த உபகாரங்களுக்காகவும், விசேஷமாய் என்னை இந்நேர மட்டும் பிழைத்திருக்கச் செய்ததற்காகவும் உமக்கு இடைவிடாத தோத்திரம் செய்கிறேன். இன்று உம்முடைய கற்பனை தவறாமல் நடக்கக் கெட்டி மனதாயிருக்கிறேன். ஆனதினால் என் சிந்தனை, வாக்கு, கிரியை, ஆத்துமம், சரீரம், சகலத்தையும் உம்முடைய பணிவிடைக்கேற்ப நடப்பித்துக் கொள்ள உமக்கே கையளிக் கிறேன். இதல்லாமல் நான் செய்கிற நற்கிரியை எல்லாம் சேசு நாதருடைய புண்ணியங்களோடே தேவரீர் கையேற்றுக் கொள்ளும். இன்று வருகிற அருள் ஆசீரை நான் அடைந்து சகல பாவங்களுக்கும் உத்திரிக்க மனதாயிருக்கிறேன். உமது அளவில்லாத கிருபையால் என்னை இரட்சித்தருளும் சுவாமீ. ஆமென்.