ஆண்டவரே! நான் உம்முடைய செபத் தியானத்தின் ஆலயத்திலே பிரவேசிக்கிற இந்நேரத்தில், சகல உலக நினைவுகளைப் புறத்தில் தள்ளி, உம்மை அதிக பக்தியோடே தியானித்து நேசிக்கவும், தேவரீருடைய சந்நிதியில் தக்க மேரை மரியாதையோடு இருந்து கவனமாய்ச் செபிக்கவும் அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ.