நீ பூசை காணப்போகையில், பற்பல காரியங்களில் பலவிதமாய்ப் பிரிந்து அலையும் உனது சிந்தனைகளை எல்லாம் ஒன்றுப்படுத்தி, ஓர் நிலையாக நிறுத்த உன்னால் இயன்ற மட்டும் முந்த முந்தப் பிரயாசப்படக் கடவாய். உனது இரட்சகரானவர் தாம் பலியாகப் போகிறதை நீ காணவும், தம்மோடு நீ ஐக்கிய மாகவும் உன்னைக் கூப்பிடுகிற இனிய சத்தம் உனது காதில் கேட்கப்படுகிறதாக எண்ணிக் கொள்ளுவாயாக.