என் சர்வேசுரா! நான் செய்த இந்த நல்ல பிரதிக்கினைகளை ஆசீர்வதித்தருளும். மேலும் உமது திருப் பணிபுரியும் குருவின் கையால் எங்களை ஆசீர்வதித்தருளும். அந்த ஆசீர்வாதத்தின் பலன் நிரந்தரம் எங்கள் மேல் குடிக் கொண்டிருக்கக்கடவது. பிதாவினுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே ஆமென்.