♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன்
மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று
புகழ்ந்திடாய் திருமறையே
1. உலகத்தின் பேரொளியாய் - வாழும்
உள்ளத்தின் ஆறுதலாய் - எந்தக்
காலமும் வாழ்ந்திடும் எழில்நிலையாம் - இன்பக்
காட்சியே குருத்துவமே
2. குருத்துவ நீர்ச்சுனையாய் - திகழ்
கிறிஸ்துவை ஈன்றவளே - இன்று
காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்க - வரும்
குருக்களைக் காத்திடுவாய்