✠ புண்ணிய சாங்கோபாங்க முயற்சி

புண்ணிய சாங்கோபாங்க முயற்சி

இயற்றியவர் 

சேசுசபை அல்போன்சு ரொதிரிகெஸ் அடிகளார்

(1526 - 1616)

இரண்டாம் பகுதி

* செபம் 

* கடவுளின் பிரசன்னம் 

* ஆன்மச் சோதனை 

* தேவ திருவுள இசைவு 

* ஒறுத்தல்

தமிழாக்கம் அருள் குழந்தைசாமி, சேசுசபை


ஐந்தாம் போதகம்

செபத்தின் பேரில் 

1 செபத்தின் மதிப்பும் மேன்மையும் 

2 செபம் நமக்கு எவ்வளவு தேவை என்பது 

3 இத்துணை மேன்மையும் தேவையுமான ஒன்றை இத்துணை எளிதாக்கியதற்காக இறைவனுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பது

4 இரு வகை மனச் செபம் 

5 இந்த இரு வகைச் செபத்தைக் குறித்தும் வேதாகமம் எடுத்துரைப்பது 

6 இந்தப் போதனையைப்பற்றிய விளக்கமும், உறுதியும் 

7 வழக்கமான மனச் செபம் 

8 தியானிப்பதின் தேவை 

9 தியானத்திலிருந்து அடையவேண்டிய நல்ல விளைவும் பெரும் பலனும் அவ்வாறு பலனடைய பயன்படுத்த வேண்டிய வகையும் 

10 தியானத்திலுள்ள மற்ற நல்ல காரியங்களும் நலன்களும் 

11. தியானத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறையும், அதிலிருந்து அடைய வேண்டிய பலனும் 

12 மனதின் முயற்சியிலும் மனப்பற்றுதலிலும் நிலைத்திருப்பது எத்துணை முக்கியமென்பது 

13, எவ்வாறு தியானிப்பது, புத்தியினால் சிந்திப்பது என்று ஒன்றும் அறியோம் என்போருடைய முறையீட்டுக்குச் சமாதானம் 

14 நமது தியானத்தை நன்றாய்ச் செய்யவும், அதிலிருந்து பலனடையவும் மிக உதவியான இரண்டு அறிவுரைகள் 

15 தியானத்தில் நமக்கு மிகத் தேவையான ஒரு காரியத்தையே உணர்வு கொள்ளவேண்டும்: அதை நாம் அடையும் வரையில் அதிலே ஊன்றி நிற்கவேண்டும் என்பதை எங்ஙனம் கண்டு பிடிப்பது என்பது

16 தியானத்தில் ஒரே காரியத்தில் நீண்ட நேரம் தங்கியிருப்பது எங்ஙனம் என்பதும், நுணுக்கமாய் உற்றுத் தியானிப்பது மிகப் பயனளிக்கும் வகை என்பதும் 

17 தேவ இரகசியங்களைப்பற்றித் தியானம் செய்யும்போது நாம் ஓய்வுடன் செய்யவேண்டும்; மேலெழுந்தவாரியாய்ச் செய்யக்கூடாது; இதைச் செய்ய நமக்கு உதவும் சில வழிவகைகள்

18 நல்ல தியானம் செய்வதும் அதில் பயனடைவதும் நமது கையில் இருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு 

19 நல்ல பலனுள்ள தியானம் செய்வதற்கான வேறு சில எளிதான வழித்துறைகளும் வகைகளும் 

20 விளக்கிக் காட்டிய செபத்தில் நாம் மன நிறைவு கொள்ளவேண்டும். மேலான எதையும் அடையக் கூடவில்லை என்று கலங்கவோ முறையிடவோ கூடாது 

21 செபத்தில் வரும் பராக்குக்குக் காரணமும், அதற்குரிய மாற்றுக்களும் 

22 தியானத்தில் நம்முடைய கவனத்தையும் வணக்கத்தையும் காப்பாற்ற வேறு வழிவகைகள் 

23 செபத்தில் பராக்கால் அலட்டப்படுபவர்களுக்கு ஒரு பெரும் ஆறுதல் 

24 தூங்கும் சோதனை எங்கிருந்து வருகிறது; அதற்குகந்த மாற்றுக்கள் 

25 சில சிறந்த வேலைகளில் மிகுதியாகச் செபிப்பது எத்துணைத் தகுதி என்பது 

26 இந்த முயற்சிகளைச் செய்யும்போது நாம் அடையவேண்டிய பலன் 

27 , இந்த ஞான முயற்சிகளினால் மிகுந்த பலன் அடைவதற்கு உதவும் சில குறிப்புகள் ஞானவாசகத்தின் பேரிலும், அது எத்துணை இன்றியமையாததென்றும், அதை நன்றாகவும் பலனுள்ளதாகவும் செய்வதற்கான பல வழிகளும்


ஆறாம் போதகம்

1 இம்முயற்சியின் மேன்மையும், அதன் பெரும் பயன்களும் 

2 கடவுளின் முன்னிலையில் எப்போதும் நடப்பது. 'எதில் அடங்கியிருக்கிறது என்பது 

3 இந்த முயற்சி முக்கியமாய் அடங்கியிருக்கும் மனத்தின் செயல்களும், அவற்றை நாம் எவ்வாறு பயில்வது என்பதும் 

4 இந்த முயற்சியை இன்னும் விளக்கி, கடவுள் முன்னிலையில் நடப்பதற்கான மிக எளிதானதும். பயனுள்ளதும், உயர்ந்த உத்தமதனத்துக்கு *இட்டுச் செல்வதுமான வகையை எடுத்துக்காட்டுவது 

5 கடவுளின் முன் எப்போதும் நடப்பதற்கான இந்தத் தனி முயற்சியானது மற்றவைகளில் வேறுபட்டிருப்பதையும் அவைகளுக்கு மேல் கொண்டுள்ள நலத்தையும் எடுத்துரைப்பது


ஏழாம் போதகம் 

1 ஆன்மச் சோதனையின் முக்கியத்துவம் 

2 தனி ஆன்மச் சோதனை எந்தப் பொருளைப் பற்றிச் செய்வது என்பது குறித்து 

3 தனி ஆன்மச் சோதனைக்கு வேண்டிய சரியான பொருளை எவ்வாறு கண்டு தெரிந்தெடுப்பது என்பதைப் பற்றி இரண்டு அறிவுரைகள் 

4. - தனி ஆன்மச் சோதனை ஒரே காரியத்தின் பேரில் மட்டும் செய்யவேண்டும் 

5 தனி ஆன்மச் சோதனையைப் புண்ணியங்களின் பகுதிகள் படிகளுக்கு ஏற்றவாறு பாகுபாடு படுத்துவது எவ்வாறு 

6 தனி ஆன்மச் சோதனைக்குக் குறித்த பொருளை எளிதில் முற்றலாகாது என்பது, அதே பொருளைக் குறித்து எத்துணைக் காலம் செய்து வருவது நல்லது என்பது பற்றியும் 

7 தனி ஆன்மச் சோதனை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி

8 ஆன்மச் சோதனையில் முக்கியமாய்த் துக்கம், பிரதிக்கினை ஆகியவற்றில் நாம் நீண்ட நேரம் நிலைத்திருக்க வேண்டுமென்பது 

9 ஆன்மச் சோதனையோடு சில தபசு முயற்சிகளைச் சேர்த்துக் கொள்வது மிக உதவியாயிருக்குமென்பது 

10 பொது ஆன்மச் சோதனையின் பேரில் 

11 ஆன்மச் சோதனை மற்ற எல்லா ஞான வகைகள் போதனைகளையும் அனுசரிப்பதற்கான ஒரு வழி வகை: நாம் அதனால் பயனடையாததற்குக் காரணம் நாம் அதைச் செய்யவேண்டிய முறை யில் செய்யாததே


எட்டாம் போதகம்

1 இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் 

2 இரண்டாம் அடிப்படைக் கோட்பாட்டுக்கு மேலும் விளக்கம் 

3 கடவுளின் திருவுளத்திற்கு இசைந்து நடப்ப தால் வரும் பெரும் நலன்களும் சலுகைகளும் 

4 தேவதிருவுளத்தோடு உத்தமவிதமாய் ஒன்றித் திருப்பது இவ்வுலகிலேயே மகிழ்ச்சியும் பேரின்பமுமாக இருக்கிறது என்பது பற்றி 

5 கடவுளில் மட்டுமே மன நிறைவைக் கண்டடையலாம்; வேறெதிலும் தனது இளைப்பாற்றியைத் தேடுபவன் மெய்யான மன நிறைவை ஒரு போதும் அடையமாட்டான் என்பது பற்றி 

6 தேவ திருவுளத்திற்கு இசைத்து நடப்பது மன நிறைவை அடைவதற்கான வழி என்று காட்டும் வேறொரு வகை 

7 தேவ திருவுளத்தோடு ஒன்றிப்பதிலுள்ள வேறு நலன்களும் சலுகைகளும் 

8 தேவ திருவுளத்திற்கு இசைந்து நடக்கும், இந்தப் பயிற்சி கடவுளுக்கு எத்துணை விருப்ப மானது என்றும் அதிலுள்ள பெரும் புனிதத் தன்மையை எடுத்துக்காட்டுகளினால் உறுதிப் படுத்துவதும்பற்றி

9 தேவ திருவுள இசைவாகிய இந்தப் பயிற்சியை எளிதும் இனிதும் ஆக்கக்கூடிய சில காரியங்கள 

10 கடவுள் நம்மீது வைத்திருக்கும் தந்தைக்குரிய தனிப் பராமரிப்பும் அவரில் நாம் வைக்க வேண்டிய பிள்ளைக்குரிய நம்பிக்கையும் 

11 கடவுள் பேரில் இந்த நெருங்கிய பிள்ளைக்குரிய நம்பிக்கை வைப்பதற்கு உதவும்படியாக வேதாகமத்தில் சில வாக்கியங்களும் எடுத்துக்காட்டுகளும் 

12 கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து நடக்கும் இப்பயிற்சியில் தியானம் எவ்வளவு பலனுள்ளதும் உன்ன தமானதும் என்பதையும், நாம் இந்த இசைந்து நடப்பதின் மூன்றாம்படி.யை அடையும் வரையில் எவ்வாறு நுணுக்கங்களைக் கவனிக்க வேண்டுமென்பதையும்பற்றி

13 கீழ்ப்படி தல் துறவியை உலகின் எப்பகுதிக்குஅனுப்பியபோதிலும் அவனிடமிருக்கவேண்டிய சம நிலையும் தேவ திருவுளத்தின் மட்டிலுள்ள இசைவும் 

14 கீழ்ப்படிதல் ஒரு துறவிக்குக் கொடுக்கும் எந்த அலுவலிலும் அவர் கொண்டிருக்கவேண்டிய சம நிலையும், கடவுளின் திருவுளத்துக்கு இசைவும் 

15 நமக்குக் - கொடுக்கப்பட்டுள்ள இயல்பான கொடைகள், திறமை ஆகியவற்றில் தேவ திருவுளத்தின் மட்டில் கொண்டிருக்க வேண்டிய இசைவின்பேரில் 

16 நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நம்மிடம் கடவுளின் திருவுளத்தின் மட்டில் இருக்க வேண்டிய இசைவுபற்றி 

17 நமது நம்பிக்கையை மருத்துவர்களிலும் மருந்துகளிலும் வைக்காமல் கடவுளில் வைக்கவேண்டு மென்பது பற்றியும், தேவ திருவுளத்துக்கு நோயில் மட்டுமல்லாமல் அதைச் சேர்ந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் இசைந்திருக்க வேண்டு மென்பதுபற்றியும்

18 இதுவரையில் சொல்லப்பட்டவைகளை உறுதிப் படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகள்

19 சாவிலும் வாழ்விலும் தேவ திருவுளத்தில் நமக்கு இருக்கவேண்டிய இசைவைப்பற்றி 

20 முறையோடும் பரிசுத்தமாயும் சாவை விரும்புவதற்குரிய பல காரணங்களையும் நோக்கங்களையும் பற்றி 

21 முன் சொல்லியது எடுத்துக்காட்டுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது 

22 கடவுள் நமக்கு அனுப்பும் பொதுவான துன்பதுரிதங்களிலும் நம்மிடம் இருக்கவேண்டிய தேவ திருவுள இசைவுபற்றி 

23 ஆண்டவர் நமக்கு அனுப்பும் இடையூறுகளை, தனிப்பட்டவைகளையும் பொதுவானவைகளையும்; நல்ல முறையில் சகித்துத் தேவ திருவுள இசை வுடன் நடப்பதற்கு உதவியாயிருக்கும் ஒரு வழி நமது பாவங்களின் அறிவும் உள்ளுணர்வும் என்பதுபற்றி 

24 செபத்தில் சாரமற்றத் தனமும் வறட்சியும் வரும்போது நாம் கடவுளின் திருவுளத்திற்கு இசைந்திருப்பது எங்ஙனம் என்பதுபற்றி 

25 தியான நேரத்தில் வறட்சியாகவும் அமைதியின்றியும் இருப்போருடைய முறைப்பாட்டுக்குத் தகுந்த விடை 

26 வறண்ட தன்மையையும் மன வறட்சியையும் நல்ல பயனளிக்கவல்ல செபமாக மாற்றுவது பற்றி 

27 தியானத்தில் வரும் வறட்சியின் போது நாம் கடவுளின் திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நமக்கு ஆறுதலளிக்கவும் உள்ள வேறு காரணங்கள் 

28 மேலே கூறிய நிலையில் நாம் இருப்பதைக்கண்டு, தியானத்தை விட்டுவிடுவது பெரும் பிசகும், கனத்த சோதனையும் என்பதுபற்றி 

29 முன் சொல்லியவற்றை உறுதிப்படுத்த சில எடுத்துக்காட்டுகள்

30 புண்ணியங்கள், ஞானவரங்கள் வழங்கப்படுவதில் நம்மிடம் இரக்கவேண்டிய தேவ திருவுள இசைவுபற்றி 

31 மோட்ச மகிமையைப்பற்றிய நல்ல காரியங்களில் நாம் கொண்டிருக்கவேண்டிய தேவ திருவுள இசைவுபற்றி 

32 தேவ திருவுள இசைவ, ஒன்றிப்பு, உத்தம இறையன்பு ஆகியன பற்றியும் இந்த முயற்சியை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் 

33 இந்த முயற்சியை வேதாகமம் எத்துணைப் பரிந்துரைக்கிறது அதில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது என்பது பற்றி 

34 இந்த முயற்சியை இன்னும் எவ்வாறு விரிவாக் குவது என்பதுபற்றி 


ஒன்பதாம் போதகம்

1 செபத்தோடு ஒறுத்தலும் சேரவேண்டும்: இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று உதவ வேண்டும் 

2 ஒறுத்தல் எதில் அடங்கியிருக்கிறது; அது நமக்குத் தேவை 

3 கடவுளின் மிகப் பெருந்தண்டனைகளில் ஒன்று ஒருவனைத் தன் இச்சைகளுக்கும் ஆவல்களுக்கும் கையளித்து, அவற்றின்படி நடக்க விட்டு விடுவதாகும் 

4 தன்மீது கொண்டிருக்கவேண்டிய தூய வெறுப்பையும், அதினின்று புறப்படும் ஒறுத்தல் மனப்பான்மை, தவமனப்பான்மையைப்பற்றியும் 

5 நம்முடைய ஞானவளர்ச்சியும் உத்தம தனமும் ஒறுத்தலில் அடங்கியிருக்கிறது 

6 துறவிகளுக்கு, சிறப்பாய் தம் அயலாரோடு தொடர்பு கொள்ளவேண்டியவர்களுக்கு ஒறுத்தல் மிகவும் முக்கியம் 

7 இருவகை ஒறுத்தலும் தபசும் : யேசு சபை இரண்டையும் எவ்வாறு ஏற்று அனுசரிக்கிறது என்பது 

8 ஒறுத்தல் ஆன்மாவையும் உடலையும் பெய்யாகவே நேசிப்பது; அவற்றைப் பகைப்பதன்று

9 தன்ளை ஒறுக்க முயற்சி எடுக்காதவன் ஞான வாழ்வும் வாழ்வதில்லை; பகுத்தறிவுள்ளவனாகவும் வாழ்வதில்லை 

10 தன்னை ஒறுப்பதைவிட ஒறுக்காமலிருப்பதால் தான் மிகுந்த தொந்திரவு உண்டு 

11 ஒறுத்தல் முயற்சியைப்பற்றி 

12 எவ்வாறு நடைமுறையில் ஒறுத்தல் செய்வது 

13 முறையுடன் செய்யக்கூடியவற்றிலும், நமக்குத் தேவையானவற்றிலுங்கூட நம்மை ஒறுக்க வேண்டும் 

14 நம்மை ஆண்டு நடத்திக் கனமான குற்றங்களில் விழச் செய்யும் துர்குணத்தை அல்லது இச்சையை தாம் முக்கியமாக ஒறுக்க வேண்டும் 

15 சிறு காரியங்களிலும் ஒறுத்தலை விடக்கூடாது; இந்த ஒறுத்தல் கடவுளுக்கு எத்துணைப் பிரியமுள்ளது, நமக்கு எத்துணைப் பயனுள்ளது என்பதுபற்றி 

16 சிறு காரியங்களில் ஒறுத்தலை அசட்டை செய்வதால் வரும் தீங்கும் தவறும் 

17 ஒறுத்தலைப்பற்றி மூன்று முக்கிய அறிவுரைகள் 

18 புண்ணியத்தில் எத்துணை நல்லவர்களாயும் முன்னேற்றமடைந்தவர்களாவும் இருந்தாலும், - ஒறுத்தல் முயற்சி எப்பொழுதும் தேவை 

19 ஒறுத்தலை எளிதும் இனிதும் ஆக்கக்கூடிய இரு வழிகள் கடவுளின் அருளும் அவர்மீதுள்ள தூய அன்புமாம் 

20 ஒறுத்தல் முயற்சியை எளிதும் இன்பமும் ஆக்குவதற்கான வேறொரு முகாந்தரம் சம்பாவனையில் நம்பிக்கை வைப்பதாகும் 

21 முந்தின அதிகாரத்தில் சொல்லியவற்றைச் சில எடுத்துக்காட்டுகளினால் உறுதிப்படுத்துவது 

22 நம் மீட்பராகிய கிறிஸ்துவின் மாதிரிகை ஒறுத்தல் முயற்சியை நமக்கு எளிதாக்கி. உதவுவதற்கான முகாந்தரம் 

23 ஒறுத்தலின் மூன்று படிகள்